+91 99 42 11 53 99

ஆலம் பட்டை மருத்துவ குணங்கள்



aalam-pattai-for-tooth

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க ஆலமரத்தின் விழுது மற்றும் வேர்கள் நமது பற்களை பலப்படுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஆலமரம் அடர்ந்து வளர்ந்திருப்பது போல அதன் பயன்களும் இன்னும் பல வியாதிகளைக் போக்கும் மருந்தாக இருக்கின்றன.

ஆலமரத்து வேர்ப்பட்டை சிறிதளவு அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமிட்டுக் குடிக்க சர்க்கரை நோய் நம்மை விட்டு அகல்கிறது. இதற்காக ஒரு ஆலமரத்தை வெட்டி வேர் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆலமரத்தின் விழுதுகள் கூட வேர்கள் தான், அதையும் நாம் பயன்படுத்தலாம்.

ஆலமர வேரில் இருக்கும் துவர்ப்பு தன்மை வாதம் மற்றும் கப தோஷங்களை சரி செய்து வெட்டை நோயை விரட்டுகிறது என்பது ஆயுர்வேதம் தரும் வாக்குமூலம். இதற்கு ஆலமர வேர் பட்டை பொடியை பால் அல்லது வெந்நீருடன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டுமாம். கூடுதலாக இது கர்ப்ப பையையும் பலப்படுத்துகிறது.

ஆலமரப் பட்டையில் இருக்கும் Tannin என்ற வேதிப்பொருள்கள் மலத்தை இருக வைப்பதன் மூலம் பெருங்கழிச்சலை சரி செய்கிறது. நமது முன்னோர்களும் கழிச்சலுக்கு மருந்தாக ஆலமரப்பட்டை கஷாயத்தை அருந்தி இருக்கிறார்கள். இருப்பினும், எதோ டீ, காபி குடிப்பதை போல ஒரு நாளைக்கு நான்கைந்து தடவை இதைக் குடிக்க கூடாது என்பது மருத்துவர் அறிவுரை.

ஆலமரப் பட்டையின் துவர்ப்பு தன்மை, பல் ஈறுகளை பலப்படுத்துகிறது. வாயில் உள்ள நுண்ணிய கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் கரையை சுலபமாக நீக்குகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவை குணப்படுத்துகிறது.

சர்க்கரை பல்லுக்கு ஆபத்து, உப்பும் துவர்ப்பும் பல்லுக்கு பாதுகாப்பு. இதை எந்த பழமொழியிலும் சொல்லவில்லை, நாங்கள்தான் சொல்கிறோம். சர்க்கரை நிறைந்த டீ, காபி, சாக்லேட், பிஸ்கட் போன்ற எந்த உணவுகளையும் சாப்பிட்டுவிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது பல்லுக்கு கேடு. மற்றொரு புறம், துவர்ப்பு தன்மையுள்ள ஆலமரப் பட்டை பல்பொடி பல்லுக்கு நன்மை.

1 Comments

Vijayalakshmi 08 Mar 2020

Super. Works well for kidney cleaning.

Leave a comment

© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services