ஆகாசக் கருடன் கிழங்கு, கருடன் கிழங்கு, அல்லது கொல்லங்கோவை என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் தாவரத்தின் வேராக செயல்படும் இந்தக் கிழங்கு மண்ணில் புதைத்து வைக்கப்படாத நேரத்தில் கூட காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி தொடர்ந்து உயிர்வாழும் தன்மை கொண்டது.
கண் திருஷ்டியை இது நீக்கும் என்று நம்பப்படுவதால், பலர் இதை வீட்டின் முன் கட்டி தொங்க விடுகிறார்கள். கட்டி விடப்பட்ட கிழங்கு அழுகி போகாமல் இருந்தால் கண்திருஷ்டி ஏதுமில்லை. ஒரு வேலை அது அழுகிப் போய்விட்டால் திருஷ்டி இருந்திருக்கிறது என்பது மக்களின் நம்பிக்கை.
இதே போல பில்லி, சூனியம், ஏவல் போன்ற துஷ்ட சக்திகளையும் நமது வீட்டில் விடாமல் இந்தக் கிழங்கு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உண்டு. இதை ஹோமம் செய்யும் போதும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறாக மக்கள் அனைவரும் இதை ஒரு பூஜை பொருளாக பயன்படுத்துகிறார்களே அல்லாமல் இதன் மருத்துவ குணங்களை பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு.
குடற்புழுக்களை நீக்கும் தன்மை இதற்கு இருப்பதால், அது சார்ந்த வயிற்றோட்டத்தின் முற்றிய நிலையை குணப்படுத்த கருடன் கிழங்கு உதவுகிறது. இருப்பினும், கருடன் கிழங்கை உள்ளுக்குள் தருவது சற்று எச்சரிக்கையாக செய்யப்பட வேண்டும். அதிகம் வாந்தியை தூண்டுகிற ஒன்று இது.
மூட்டுவலி, மூட்டு மரத்து போகும் நேரங்களில் வெளிப்புற உபயோகமாக இதை பயன்படுத்துகிறார்கள். மேலும் மைசூர் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் கருடன் கிழங்கை பாம்பு விஷம் குறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். பாம்பை கருடனால் மட்டுமே விரட்ட முடியும் என்ற பொருளில் இதற்கு கருடன் கிழங்கு என்ற பெயர் வந்திருக்கக்கூடும்.
Super. Works well for kidney cleaning.
© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services