+91 99 42 11 53 99

கரு கரு தலைமுடிக்கு கரும்பூலா



karumboola-powder

கரும்பூலா என்ற இந்த மூலிகை கொஞ்சம் அரிதான மூலிகை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்ம ஊர் நாட்டு மருந்து கடைக்காரர்களுக்கு கூட தெரியாத மூலிகை. இப்போது சில ஆண்டுகளாக மட்டுமே இது நாட்டு மருந்தாக வெகுஜனப் பயன்பாட்டில் இருக்கிறது.

இரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை உறுதியற்ற, காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் சிறு மரமாக, இந்த கரும்பூலா காட்டுப் பகுதிகளில் வளர்கிறது. கீழாநெல்லி குடும்பத்தை சேர்ந்த இதற்கு காட்டு கீழாநெல்லி, கருநெல்லி, நீர்ப்பூலா போன்ற வேறு பெயர்களும் தமிழில் உண்டு. இதன் இலை, தண்டு, காய்கள் என்ற அனைத்துமே கீழாநெல்லி போலவே இருக்கும். ஆனால் செடியாக அல்ல, ஒரு மரமாக.

கீழாநெல்லி இலைகளை போல நீள்வட்ட வடிவில், மரம் என்பதால் ஒரு மிளகு அளவில் கரு நீல நிற பழங்கள் தண்டுடன் சேர்ந்து காணப்படும். பழத்தை கசக்கினால் கிட்டத்தட்ட நாவல் பழத்தை போல சாறு கிடைக்கும். இதன் இலைகள், பழம், பட்டை போன்ற உறுப்புகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

கரும்பூலா பட்டை துவர்ப்பியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. இதன் வேர்ப்பட்டை ஆஸ்த்மா மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது உள்ள மனிதர்கள் கணிப்பொறியை அல்லது செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண்கள் வறண்டு போகின்றன. இது மாதிரியான கண் வறட்சிக்கு மருந்தாக கரும்பூலாவின் தண்டுச் சாற்றை கானா நாட்டில் பயன்படுத்துகின்றனர்.

கரும்பூலா இலை தூள் தோலில் வரும் கட்டிகள், சீழ் கட்டிகளை குணப்படுத்த பயன்படுகிறது. கரும்பூலா இலையிலும் துவரப்பி தன்மை இருப்பதால் கரும்பூலா இலைச்சாறு சிறுவர்களுக்கு வரும் பெருங்கழிச்சலை குணப்படுத்துகிறது.

இது போன்ற உடல் நலம் காக்கும் மருத்துவப்பயன்கள் கரும்பூலாவிற்கு இருந்தாலும் நாம் அதிகமாக அதை ஒரு அழகூட்டும் பொருளாகவே பார்க்கிறோம். தற்போது பெரும்பாலானவர்கள் இதன் இலைகளை தலைமுடியின் கருப்பு நிறத்தை பேணுவதற்கும், வெள்ளை முடிகளை மறைப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

இயற்கை நிறச்சாயமாக இதை பயன்படுத்துவதை பொறுத்தமட்டில் கரும்பூலா இலை மற்ற மூலிகைகளை காட்டிலும் மிக நல்ல தேர்வு. இதில் இருக்கும் Tannin மற்றும் Flavonoid என்ற வேதிப்பொருட்கள் இயற்கையான நிறச்சாயமாக பயன்படுவதுடன் அல்லாமல், நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மைகளையும் நமது தலை முடியின் வேர்க்கால்களுக்கு தருகின்றன.

இந்தக் கரும்பூலா இலைகளை தனியாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், ஐந்து பங்கு கரும்பூலா இலைகளோடு நீலி அவுரி, மருதாணி, செம்பருத்தி பூ, கருநொச்சி இலை, அருநெல்லி இலை போன்றவற்றை தனித்தனியாக ஒரு பங்கு சேர்த்து அரைத்து நன்னீரில் ஊறவைத்து தலைக்கு தேய்த்தால் நல்ல கருநிறம் தலைக்கு கிடைக்கும் என்பது சமீப காலத்து ஆரய்ச்சிகளின் முடிவாகும்.

1 Comments

Vijayalakshmi 08 Mar 2020

Super. Works well for kidney cleaning.

Leave a comment

© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services