+91 99 42 11 53 99

தொட்டால் சிணுங்கி பயன்கள்



thottal-sinungi

தொட்டால் சிணுங்கி போல எதற்கு எடுத்தாலும் சிணுங்கிக்கொண்டு இருக்கிறாயே என்று பலர் சொல்வதுண்டு. இதை நாம் அனைவரும் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே வார்த்தைகளை நாமும் பயன்படுத்தியும் இருக்கிறோம். ஆனால் இந்த தொட்டால் சிணுங்கி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்று கேட்டால், அதிகமானோர் சொல்லும் பதில் தொட்டால் சிணுங்கும் அதுதான் தொட்டால் சிணுங்கி என்பது மட்டும்தான்.

சித்த மருத்துவத் துறையில் பல கூட்டு மருந்து தயாரிப்பில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில், ரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது.

தொட்டால் சிணுங்கி இலையுடன் சீரகம், மிளகு, மஞ்சள் தூள் பெருங்காய பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு அதை அரை டம்ளராக மற்றவைத்து வடிகட்டி அருந்தி முழங்கால் வலி, இடுப்பு வலி, உடல் வலி போன்றவற்றில் இருந்து நமது கிராம மக்கள் குணமாகி இருக்கிறார்கள்.

சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தொட்டால் சிணுங்கி இலையை வெறும் வெந்நீரில் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டி அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது.

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட, உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகளான நீர்க்கடுப்பு, மூலம், நீர் எரிச்சல், வயிற்றுச் சூடு போன்ற நோய்கள் நம்மை விட்டு அகலும். மேலும் இதே முறை ஆண்மைக்குறைவை சரி செய்கிறது.

தொட்டால் சிணுங்கி இலைக்கு புண்களை ஆற்றும் தன்மையும் உள்ளது. பச்சை தொட்டால் சிணுங்கி இலைகளை அரைத்து, சாறு எடுத்து தடவி வர நாள்பட்ட புண்கள் குணமாகும். மேலும் படை, தேமல் போன்ற தோல்நோய்களும் விலகும். வண்டுகள் மற்றும் பூச்சிகளின் கடிகளுக்கு விஷமுறிவு மருந்தாகவும் தொட்டால் சிணுங்கி இலைகள் பயன்படுகின்றன.

தொட்டால் சிணுங்கியில் உள்ள குளிர்ச்சியும், துவர்ப்பு தன்மையும் மாதவிடாய் காலத்தில் வரும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தி, கருப்பையை பலப்படுத்துகிறது. இதற்கு மட்டும் தொட்டால் சிணுங்கி முழு செடியையும் அரைத்து, அரிசி கழுவிய நீருடன் சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

பண்டைய நமது பாரம்பரிய மருத்துவத்தில், ஒவ்வொரு மூலிகையையும் தண்ணீருடன், பாலுடன், மோருடன், தேனுடன், நெய்யுடன் என்று தனித்தனியாக பிரித்து சாப்பிட சொல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவே அந்த மூலிகை வேலை செய்யும் வேகத்தையும், வீரியத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதை நாம் சரியாகப் பின்பற்ற வேண்டும். மேலும் சித்த மருத்துவரின் ஆலோசனையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

1 Comments

Vijayalakshmi 08 Mar 2020

Super. Works well for kidney cleaning.

Leave a comment

© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services